போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பதிவு : ஜூன் 04, 2021, 10:48 AM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதாகி உள்ள, பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி உள்ளார்.
ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சுமார் 250 கேள்விகள் தயாரித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விசாரணையில், ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளை, ZOOM செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும், அதிக மதிப்பெண் எடுக்க உதவுவதாக கூறி, தனி அறைக்கு மாணவிகளை வரச் சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனடிப்படையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும், ஆசிரியர்கள் சிலர் மீதும், நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பிற செய்திகள்

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

6 views

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

121 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

5 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

23 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

485 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.