ஆட்டம் காணும் இஸ்ரேல் பிரதமர் நாற்காலி - நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவு
பதிவு : ஜூன் 03, 2021, 08:33 PM
இஸ்ரேலில் கடுமையான முரண்பாடுகளை கொண்ட 8 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரு புதிய கூட்டணி அரசை உருவாக்க முடிவு செய்துள்ளன. இதனால் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டும், எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில், கடந்த 12 வருடங்களாக பிரதமாரக உள்ள நெதன்யாகுவின் லிக்குட் கட்சியின் அணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மே 4ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டும் ஆட்சியமைக்க முடியவில்லை.இதையடுத்து யேஷ் அடிட் என்ற இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரான யார் லேபிட்டை ஆட்சியமைக்குமாறு இஸ்ரேலின் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.ஜூன் 2ஆம் தேதி நள்ளிரவு வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், நெதன்யாகுவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றினைக்கும் தீவிர முயற்சிகளை லேபிட் மேற்கொண்டார்.பழமைவாத யூத வலதுசாரிகள் கட்சிகளையும், அவர்களை கடுமையாக எதிர்க்கும் அரேபியர்களின் கூட்டமைப்பையும் ஒரே அணியில் இதுவரை யாரும் சேர்க்க முடிந்ததில்லை.இந்த கடினமான பணியில் வெற்றி பெற்ற லாபிட், நெப்தாலி பெனட் தலைமையிலான புதிய வலதுசாரி கட்சியையும் இந்த கூட்டணியில் சேர்த்தார். 2023 வரை நெப்தாலி பெனட் பிரதமராக பதவி வகிக்கவும், அதன் பிறகு லாபிட் பிரதமராக பதவியேற்கவும் இந்த 8 கட்சிகளின் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதனையடுத்து 8 கட்சிகளின் கூட்டணி தலைவர்கள் சார்பில், குடியரசுத் தலைவரிடம் தங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து நெப்தாலி பெனட் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.ஆனால் இந்த கூட்டணி எத்தனை காலம் தொடர்ந்து நீடிக்கும் என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள், கணிப்புகள் உருவாகியுள்ளன.
கூட்டணியை உடைக்க நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி தீவிரமாக முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1833 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

68 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா.. மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது

மூன்று விண்வெளி வீரர்களுடன் சீனாவின் லாங் மார்ச் 2எப் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

9 views

மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - "ஸ்கை டைவிங்" செய்து அசத்தல்

லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.

13 views

டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.

8 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

16 views

புவி வெப்ப மயமாதல் ஏற்படுத்தும் அழிவு... ஆர்டிக் பனிப்பாறைகள் முற்றிலும் அழியும்

புவி வெப்பமயமாதல் இனி தடுத்து நிறுத்த முடியாத கட்டத்தை கடந்து விட்டதாக மார்கஸ் ரெக்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

14 views

ஜெனிவாவில் புதின் - பைடன் சந்திப்பு... பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம்

ஜெனிவாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் புதுப்பிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.