"அரிச்சல்முனை கடலின் நீர்மட்டம் உயர்வு" - ஆய்வு செய்யாமல் சாலை என குற்றச்சாட்டு
பதிவு : ஜூன் 03, 2021, 05:35 PM
நீர் வழிப்பாதையை ஆய்வு செய்யாமல் சாலை போட்டதன் விளைவாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி...ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், கடலின் அழகை ரசிக்க துனுஷ்கோடி செல்லாமல் சொந்த ஊர் திரும்புவதில்லை... இப்படி சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் தலமாக காட்சியளிக்கிறது, அரிச்சல்முனை பகுதி... சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, முட்டையிட வரும் ஆமைகளுக்கும் அடைக்கலம் அளிக்கிறது, அரிச்சல்முனை... இந்தாண்டு மட்டும் சுமார் 19 ஆயிரத்து 200 ஆமை குஞ்சுகளை கடலில் பத்திரமாக விட்டுள்ளதாக கூறுகின்றனர், வனத்துறையினர்... பொதுவாகவே தனுஷ்கோடி கடலானது சீற்றமாகவே காணப்படும். இதனால் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப அங்கு நில அமைப்பில் அவ்வப்போது மாறுதல் ஏற்படுவதும் உண்டு.மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளை இணைக்கும் பகுதி, அரிச்சல்முனை. இங்கு கடந்த 2017ஆம் ஆண்டு மூந்திராயர் சக்கரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை மூலம் புதிய சாலை அமைக்கப்பட்டது.தற்போது சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை இருப்பதால் தனுஷ்கோடி வெறிச்சோடி காணப்படுகிறது.சமீபத்தில் கரையை கடந்த யாஸ் புயலின் போது, ஏற்பட்ட 
கடல்சீற்றத்தால் அரிச்சல்முனை பகுதியில் கடற்கரையில் உள்ள தடுப்பு சுவரையும் தாண்டி, சாலை வரையிலும் கடல்நீர் வந்தது. ஒரு சில இடங்களில் தடுப்பு சுவரின் கற்களும் அலையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தன.இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் பெரும் பாறைகளைக் கொண்டுவந்து கடலில் கொட்டித் தடுப்புச் சுவரைத் சாலையையும் பாதுகாத்தனர்.ஆனால் இவ்வாறு செய்வதால் கடலின் அழகை கெடுப்பதுடன் கடலின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர், சமூக ஆர்வலர்கள்... இதற்கு நீர்வழிப்பாதையை கண்டறிந்து, கடல் நீர் செல்லும் வகையில் பாலங்கள் அமைத்தால் மட்டுமே சாலை பாதுகாக்கப்படும் என்பது அவர்கள்து கோரிக்கையையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

100 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.