முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பதிவு : ஜூன் 03, 2021, 11:16 AM
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையொட்டி சென்னை மெரினாவுக்கு வருகை தந்த அவர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மாவட்டம் தோறும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கும் விதமாக கருணாநிதி நினைவிடத்தில் மரக்கன்று ஒன்றை அவர் நட்டுவைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

109 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

21 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

468 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

9 views

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.