5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு : பாட்டுப்பாடி குறுக்கீடு - கோபமடைந்த நீதிபதி
பதிவு : ஜூன் 03, 2021, 11:06 AM
5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு விசாரணையின் போது, பாட்டுப்பாடி இடையூறு செய்த நபரால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கோபமடைந்தார்.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரி, பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவில், தற்போதுள்ள ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சை விட, 5ஜி சேவைக்கான கதிர்வீச்சு 10 முதல் 100 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்றும்,  இதனால், பறவைகள், விலங்குகள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். 

இது தொடர்பான விசாரணை காணொலி காட்சி வாயிலாக, நீதிபதி ஜே.ஆர்.மித்தா முன்னிலையில்  நடைபெற்ற நிலையில், மனுதாரரான ஜுஹி சாவ்லா நடித்த திரைப்பட பாடல்களை யாரோ பாடி குறுக்கீடு செய்தனர். 

மூன்று முறை இது நீடித்ததால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற விசாரணையின் போது பாட்டுப்பாடி இடையூறு ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

பிற செய்திகள்

சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

14 views

திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

110 views

மனிதநேய உதவியால் மறுபிறவி எடுத்த 3 வயது குழந்தை

ஐதராபாத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையொன்று, உலகம் முழுவதும் உள்ள நல் உள்ளங்களின் மனிதநேய உதவியால், மறுபிறவி எடுத்துள்ளது.

63 views

சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

30 views

ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.