புதுச்சேரியில் நீடிக்கும் அமைச்சரவை குழப்பம் - பாஜகவிற்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள்?
பதிவு : ஜூன் 02, 2021, 07:46 PM
புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. முதலமைச்சராக மே 7ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்றாலும், இன்று வரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. 9ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பேச்சுவார்த்தை தள்ளிபோனது. இதனிடையே பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசு நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 3 பேரின் நியமனத்திற்கு தடை விதிக்குமாறு ஜெகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  கடந்த 20ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூவர் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.  அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தனர். இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், விரைவில் அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்படும் என சட்டமன்ற பாஜக தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர், 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் 2 அமைச்சர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என ரங்கசாமி திட்டவட்டமாக கூறியதாக பேசப்பட்டது. இருப்பினும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் பாஜகவிற்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள், முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதவி அளிக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 10ம் தேதிக்கு பிறகு அமைச்சரவை பதவியேற்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

121 views

மின் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

65 views

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

10 views

"பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்" - ராகுல்காந்தி வேண்டுகோள்

வரும் 19 ஆம் தேதி தமது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

7 views

புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு.

49 views

சசிகலாவுடன் பேசிய 15 பேர் நீக்கம் - இனி பேசுபவர்களும் நீக்கம் - அதிரடி முடிவு அதிமுக தலைமை

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா என முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளை அதிமுக நியமித்துள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.