“மண்டைக்காடு கோவிலில் தீ விபத்து" - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 02, 2021, 06:12 PM
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் காலை பூஜை முடிந்த பின்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூஜைகளை முடித்துவிட்டு பூஜாரிகள் கோவிலுக்கு வெளியே இருந்த போது கருவறை பகுதியில் ஏற்பட்ட தீ, மளமளவென கூரையில் பரவியது.

 

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தக்கலை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீபாராதனை முடிந்ததும் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த தீபத்தில் இருந்து கருவறையில் தீபிடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளூர் பக்தர்களால் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே சம்பவ இடத்தில் பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், விபத்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி மற்றும் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்சும் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.  

இதற்கு மத்தியில் கோயிலில் தீ விபத்து ஏற்பட அறநிலையத்துறை அலட்சியமே காரணம் என இந்து அமைப்பினர் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருத்தொண்டர்கள் சபை தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக கோவில்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பகவதி அம்மன் கோவிலை தொன்மை மாறாமல் சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பாஜக மாநில தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலைய நிர்வாகத்தின் கவனக்குறைவு என குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், முறையான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், கோவிலில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார். மேலும் கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6953 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

107 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

102 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

62 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

50 views

பிற செய்திகள்

பப்ஜி மதன் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை - வாங்கி குவித்த சொத்துகள் குறித்து கேள்வி

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 views

பெண்களைப் போல எங்களையும் மதித்த முதல்வர் - மூன்றாம் பாலினத்தவர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது.

0 views

"தமிழகத்தில் மின்வெட்டு ஏன் உள்ளது";"தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்" - முதலமைச்சருக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

3 views

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய வழக்கு - இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாளே ஆன குழந்தையின் விரல் வெட்டப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

4 views

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

11 views

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.