13 வகையான மளிகை பொருள் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பு
பதிவு : ஜூன் 02, 2021, 05:58 PM
13 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
ஊரடங்கால், மக்களின் சிரமங்களை குறைக்க,13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு  வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம்பருப்பு, புளி, துவரம்பருப்பு, கடுகு, சீரகம்,குளியல் சோப்பு, சலவை சோப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உள்ளிட்ட 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாயவிலை அட்டைதாரர்களுக்கு வழங்கபடும் என  அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 13 வகையான பொருட்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. பொருட்களை பெற, நியாயவிலை அட்டைதாரர்களுக்கு டோக்கன்ளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இன்று தலைமை செயலகத்தில் கூட்டுறவுதுறை, உணவுத்துறை அமைச்சர்களோடு,முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.இதில் நாளை தலைமைச்செயலகத்தில் இருந்து, முதலமைச்சர் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.