சீனாவின் உதவியுடன் பாக்.உருவாக்கிய தடுப்பூசி - 'பாக்வேக்' தடுப்பூசி விநியோகம் தொடக்கம்
பதிவு : ஜூன் 02, 2021, 04:49 PM
சீனாவின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராஸெனிகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து விநியோகம் செய்து வந்த பாகிஸ்தான் முதன் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது. சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு, மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்டது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இவை பிரித்தெடுக்கப்பட்டு, தடுப்பூசிகளாக மாற்றப்பட்டு குப்பிகளில் அடைக்கப்பட்டன.பாகிஸ்தானில் 18,000 பேரிடம்  இந்த தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டதில், இதன் செயல் திறன் 74.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து பாக்வேக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி விநியோகம் பாகிஸ்தானில் தொடங்கியது.அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் இந்த தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத் துறை ஆலோசகர் டாக்டர் பைசல் சுல்தான் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் கொரோனா தடுப்பு பணிக்கு சீனா மிகப்பெரிய அளவிற்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது. 



ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.