இசையால் இதயங்களை ஈர்த்த இளையராஜா!!
பதிவு : ஜூன் 02, 2021, 04:42 PM
இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...
இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...

நம் சந்தோஷங்கள், கவலைகள், துயரங்கள் என அனைத்திலும் நம்முடன் துணையாய் இருப்பது இசை... கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இசை இளையராஜாவினுடையது. 1943 ஆம் ஆண்டு ஜுன் 2 ஆம் தேதி பண்ணைபுரத்தில் பிறந்த ராசையா, 1976 - ல் அன்னக்கிளி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இளையராஜாவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தார் இளையராஜா. கிராமிய பாடல்களின் மாறாத மண்வாசனையை தன் இசையெங்கும் பதியமிட்டவர், மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் இழையவிட்டு தன் பாடல்களின் மூலம் பலப் புதுமைகளை நிகழ்த்திக் காட்டினார் இளையராஜா...

மிகக்குறுகிய காலத்திலேயே இளையராஜா இசையமைத்தால் படம் ஹிட் என்ற நிலை உருவானது. குழந்தைக்கான தாலாட்டு, காதலின் பரிதவிப்பு, வெற்றிக் கொண்டாட்டங்கள், மன முறிவுகள்,அழுகைகள், தேற்றுதல் என அனைத்திற்கும் இளையராஜாவின் இசை பொருந்திப் போக அவர் இசை ஞானியானார். 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. இவர் இசையமைத்த படங்களின் பிண்ணனி இசையும் பிரமிப்பின் உச்சம் தான்...
காமெடிக்கு கூட பிண்ணனியில் வலு சேர்த்தது இவரின் இசை. இன்றும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு  இவர் அமைத்த  பிண்ணனி இசை சிரிப்பை வரவழைக்க கூடியது. இசையில் புதிய உச்சங்களை தொட்டவர் இது வரை 6 தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக கணினி மூலம், விக்ரம் படத்திற்கு இசையமைத்தார். ஆசியாவிலேயே சிம்பொனியில் இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா தான். 1980 களுக்கு பின் இளையராஜாவின் வரவு தமிழ்த் திரைப்பட இசைவுலகில் புது சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. தமிழ் திரையிசையை புதிய தளத்திற்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு இவருடையது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

38 views

சிவசங்கர் பாபாவை வைத்து நகைச்சுவை காட்சி... சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் மயில்சாமி

யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா நடத்திய விவாதத்தை அப்படியே தத்ரூபமாக காட்சிப்படுத்தி பாளையத்தம்மன் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

415 views

நெட்ஃபிளிக்ஸின் அடுத்த தயாரிப்பில் சமந்தா? தகவல் உண்மையில்லை என விளக்கம்

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி வெப்சீரிஸ் ஒன்றில், சமந்தா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 views

ராம் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில், ஆர்.ஜே. பாலாஜி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

40 views

ராஜமவுலி இயக்கும் "ஆர்ஆர்ஆர்" திரைப்படம் - ஜூலை 1 முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

12 views

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மறைவு- உடல் உறுப்புகளை தானமாக தந்த குடும்பத்தினர்

சாலை விபத்தில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.