மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - தடுப்பூசி குறித்து கோரிக்கை
பதிவு : ஜூன் 02, 2021, 02:52 PM
தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாகவும், தங்களிடமும் தமிழக பிரதிநிதிகள் நேரடியாக கோரிக்கை வைத்ததாகவும் தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விவகாரத்தில் மேலும் தாமதிக்காமல் தடுப்பூசி தொழிற்சாலையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழக அரசின் முயற்சியால் தடுப்பூசி தட்டுப்பாடு பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், மக்கள் தொகை மற்றும் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வழங்கப்படவில்லை என கடிதத்தில் கூறியுள்ளார்.தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,எனினும் இந்த ஒதுக்கீடு தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே தமிழகத்திற்கு மேலும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டுமெனவும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்த வாரத்திலேயே அளிக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

13 views

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

126 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

5 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

23 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

500 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.