4.95 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மாவட்ட வாரியாக பிரித்து அளிப்பு
பதிவு : ஜூன் 02, 2021, 02:23 PM
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து 45-வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக, தமிழகத்திற்கு மேலும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 54 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 10 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 8 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

கோவைக்கு தடுப்பூசி குறைவாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிகளவில் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தலா 10 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியான நோய் பரவல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென தமிழகத்திற்கு இதுவரை 87.44  லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் அனைத்து வயதினரையும் சேர்த்து இதுவரை 90.31 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

95 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

21 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

455 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

8 views

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.