கொரோனா இரண்டாம் அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 02, 2021, 11:07 AM
கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள இந்த தகவலில், நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், ஜார்கண்ட் மாநிலத்தில் 39 மருத்துவர்களும் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே குறைவாக உத்தரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் 21 மருத்துவர்களும், புதுச்சேரியில் 1 மருத்துவரும் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன மோசடி - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 views

இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் - 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

9 views

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

17 views

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6 views

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல்;தமி​ழிசையிடம் வழங்கினார் ரங்கசாமி - ஒப்புதல் கிடைத்த உடன் பதவியேற்பு விழா

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

8 views

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.