ஊரடங்கில் மது விற்பனை அமோகம் : 'சரக்கு' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு
பதிவு : ஜூன் 01, 2021, 05:49 PM
வாணியம்பாடியில் சரக்கு என்ற வாட்ஸ்அப் குழு அமைத்து ஊரடங்கிலும் கனஜோராக மது விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் கனஜோராக கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்ததும், அதுதொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்தது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் உறுதியான நிலையில் போலீசார் ஏராளமானோரை கைது செய்தனர். 

இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் நடந்த சோதனையில் 5000க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. ரயில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விதவிதமான மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆனால் போலீசாரையே இப்போது அதிர வைத்திருக்கிறது சரக்கு என்ற பெயரில் இயங்கி வந்த வாட்ஸ் அப் குழு ஒன்று. கடந்த மாதம் 13ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் குழுவின் பெயர் சரக்கு... இதன் அட்மினாக இருந்தவர் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த 25 வயதான ஜனார்த்தனன்.. இந்த குழுவின் நோக்கம் குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்வது தான்...

தனக்கு இந்த பிராண்ட் மதுபானம் வேண்டும் என வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்தால் போதும்.. அது ஆடியோ, உரையாடல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்... பணத்தை கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் பெற்றுக் கொண்டு, இங்கு போய் மதுவை வாங்கிக் கொள்ளுங்கள் என்ற உத்தரவும் அதே வாட்ஸ் அப் குழுவில் வருகிறது...

இப்படியாக மதுவை ஊரடங்கில் விற்க திட்டம் போட்டு ஒரு குழுவே இயங்கி வந்திருக்கிறது... 150 க்கும் மேற்பட்டோரை கொண்டு செயல்பட்டு வந்த இந்த குழுவின் உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது...

வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி கள்ளச்சாராயத்தையும் சலுகை விலையில் கடந்த சில மாதங்களாக விநியோகித்து வந்துள்ளது இந்த சரக்கு குழு... இந்த விவகாரம் வெளியான சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்த போலீசார், வாட்ஸ் அப் குழு அட்மினான ஜனார்த்தனன், சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்...

கைதான அவர்களிடம் மதுபானங்கள் எங்கிருந்து கிடைத்தது? அவற்றை விற்பனை செய்தது எப்படி? உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

மளிகை பொருட்கள் விலை உயர்வு : "டீசல் விலை உயர்வே காரணம்"- வியாபாரிகள் கருத்து

உற்பத்தி குறைவால் உப்பு விலை உயர்ந்துள்ளதுடன், மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

1 views

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் : ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

2 views

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

5 views

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 views

யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

12 views

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.