பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
பதிவு : ஜூன் 01, 2021, 05:22 PM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன், மாணவிகளிடம் அத்துமீறியதாக கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ராஜகோபாலன் மனு தாக்கல் செய்திருந்தார். 
மேலும் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறையின் இந்த மனு, நீதிபதி முகமது பரூக் முன்பாக காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

137 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

தமிழக மின்துறை நிறுவனங்கள் 2018-19-ம் ஆண்டில் ரூ.13,176 கோடி இழப்பு - காரணம் என்ன ?

தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 views

"கொரோனா தடுப்பு - அலட்சியம் காட்டவில்லை" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 views

ஆளுநர் உரை மீதான விவாதம் : "உறுப்பினர்களின் அறிவுரைகளை ஏற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் அறிவுரைகளை தான் ஏற்றுக்கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

4 views

மளிகை பொருட்கள் விலை உயர்வு : "டீசல் விலை உயர்வே காரணம்"- வியாபாரிகள் கருத்து

உற்பத்தி குறைவால் உப்பு விலை உயர்ந்துள்ளதுடன், மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

7 views

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் : ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

7 views

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.