"2020-21ல் பொருளாதாரம் 7.3% வீழ்ச்சி" - மத்திய புள்ளியியல் அமைச்சரகம் அறிக்கை
பதிவு : ஜூன் 01, 2021, 04:00 PM
2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்புகளின் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 135 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21 நிதியாண்டில் 7.3 சதவீதம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இது தான் மிக அதிக அளவிலான பொருளாதார வீழ்ச்சி என கூறப்படுகிறது. 

அதே போல், 2020-21 நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாகுறையின் அளவு, மொத்த உள்ளநாட்டு உற்பத்தியளவில் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய கணக்குகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதிப்பாற்றாக்குறை பற்றிய திருத்தப்பட்ட கணிப்பான 9.5 சதவீதத்தை விட இது குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2020-21இல் மத்திய அரசின் மொத்த வருவாயின் அளவு, திருத்தப்பட்ட கணிப்பை விட சுமார் 88,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாகவும், மொத்த செலவீனங்கள் 61,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாகவும் உள்ளது.

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

32 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

493 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.