சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் - 6 நாட்கள் தடைபட்ட சரக்கு போக்குவரத்து
பதிவு : ஜூன் 01, 2021, 02:20 PM
சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டி, 6 நாட்கள் போக்குவரத்து தடை பட்டதற்கு கப்பல் கேப்டனே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்ட, உலகப் புகழ்பெற்ற சூயஸ் கால்வாய், ஆசியாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு உள்ள ஒரே ஒரு கடல் வழி பாதையாகும். உலகின் மொத்த சரக்கு போக்குவரத்த்தில் 10 சதவீதம் இதன் வழியாக செல்கிறது.கடந்த மார்ச் 23ஆம் தேதி சூயஸ் கால்வாயில் பயணித்த எவெர்கிரீன் என்ற மிகப் பெரிய சரக்கு பெட்டக கப்பல், எதிர்பாராத விதமாக தரைதட்டி, குறுக்குவசமாக திரும்பி, சேற்றில் சிக்கிக்கொண்டது.
ஆறு நாட்கள் முயற்சிக்கு பின், 2 லட்சம் டன்கள் எடை கொண்ட எவெர்கீர்ன் கப்பல் மீட்கப்பட்டு, அதன் பிறகு சூயிஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.இந்த ஆறு நாட்களில், தினமும் சராசரியாக 870 கோடி ரூபாயில் இருந்து 1088 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை சூயஸ் கால்வாய் நிர்வாகம் எதிர் கொண்டது.இந்த விபத்து பற்றி தீவிர விசாணை மேற்கொண்ட சூயஸ் கால்வாய் நிர்வாகம், இதற்கு முழு காரணம், இந்த கப்பலின் கேப்டன் தான் என்றும், அவர் அவசர அவசரமாக இட்ட தவறான ஆணைகளினால் எவெர்கிரீன் கப்பல் தரை தட்டியது என்றும் கூறியுள்ளது.எவெர்கீரின் கப்பலின் கருப்பு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இதை உறுதி செய்வதாகவும், சூயிஸ் கால்வாய் நிர்வாகத்தின் மீது தவறுகள் எதுவும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் இந்த விசாரணையை மேற்கொண்ட குழுவின் தலைவர் சையத் சூவைஷா கூறியுள்ளார்.எவெர்கீர்ன் கப்பலை கையகப்படுத்தியுள்ள சூயிஸ் கால்வாய் நிர்வாகம், அதன் உரிமையாளர்களிடம், ஆறு நாட்கள் வருவாய் இழப்பிற்காக 6,645 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தது. பின்னர் இதை 3,990 கோடி ரூபாயாக சமீபத்தில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

102 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

50 views

பிற செய்திகள்

பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு- பாரிஸ் வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிசுக்கு வரத் துவங்கியுள்ளனர்.

31 views

கனடாவைத் தாக்கிய கடும் சூறாவளி- முதியவர் ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் மாஸ்கூஷ் நகரைத் தாக்கிய கடும் சூறாவளி காரணமாக, ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் கடும் சேதமடைந்தன.

14 views

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

5 views

ரஷ்யாவை வாட்டும் வெப்ப அலை - கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்

ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகள் நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

4 views

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

8 views

தண்ணீரில் செல்லும் கார்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வாகனம்

எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வடக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், தண்ணீரிலும் செல்லும் வகையில் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.