சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி - திடீர் முடிவின் பின்னணி என்ன...?
பதிவு : ஜூன் 01, 2021, 01:17 PM
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதால், 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு..
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால், வயோதிகர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.உலகில் மிக அதிக மக்கள் தொகைகொண்ட நாடான சீனாவின் இன்றைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது.பல பத்தாண்டுகளாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த, தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்ததால், 2016ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகள் பெற அனுமதியளிக்கப்பட்டது.சீனா, தம்பதிகள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், பணியாளர்கள்சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மிக மிக குறைந்து, இத்தாலி மற்றும் ஜப்பானின் விகித்திற்கு இணையாக குறைந்துவிட்டத்தை சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு உறுதி செய்துள்ளது.இதன் காரணமாக எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை, இளைஞர்களின் எண்ணிக்கையை விட வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இனி தம்பதியினர் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதியளித்துள்ளது.கடந்த ஆண்டு இறுதி வரை மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 14.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் குழந்தைகளை வளர்க்க மிக அதிக செலவாவதால், சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.வேலைக்கு செல்லும் வயதினரின் எண்ணிக்கை குறைந்து, வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் போது, பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள் உருவாகின்றன.முதியோர்களை பராமரிக்கவும், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றவும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவுக்கு சீனா வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

137 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

கடலுக்கு அடியில் அழகிய உலகம் - எச்சரிக்கை விடுக்கும் யுனெஸ்கோ

ஆஸ்திரேலிய பவள பாறைகள் அழியும் நிலையி​ல் உள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 views

உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது

இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 views

இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் போர் பயிற்சி - கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து ஒத்திகை

இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள், ஒன்றான இணைந்து போர் பயிற்சியை துவக்கியுள்ளன.

10 views

காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்த செய்தியாளர் - ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

இத்தாலியில் காணாமல் போன சிறுவனை, தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 views

பயணிகள் போக்குவரத்தில் உருவாகும் புரட்சி - பாரிஸ் நகரில் பறக்கும் டாக்ஸி

பிரான்ஸில் மிக விரைவில் பறக்கும் டாக்ஸிக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அது பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

60 views

விண்வெளி நிலையத்தை உருவாக்கும் வீரர்கள் - விண்வெளி வீரர்களுடன் உரையாடிய ஷி ஜின்பிங்

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணியில் அந்நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.