நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி - திருமண போட்டோஷூட்டின் போது சம்பவம்
பதிவு : ஜூன் 01, 2021, 12:52 PM
ஆந்திராவில் திருமண போட்டோஷூட் எடுக்க சென்ற போது மணமகன் உள்பட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கும்பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் அவருடைய நண்பர்களான நிரஞ்சன் மற்றும் குமார் ஆகிய 2 பேரும் வினோத்குமாரை போட்டோ எடுக்க அழைத்துள்ளனர். திருமணத்திற்கு முன்பாக போட்டோஷூட் எடுக்க வேண்டும் என விரும்பிய அவர்கள் அங்குள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். பாறையில் நின்றபடி போஸ் கொடுத்த வினோத்குமார், திடீரென நீரில் வழுக்கி விழுந்தார். அப்போது அவரை போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நண்பர்களும் அடுத்தடுத்து காப்பாற்ற முயன்றதில் நீருக்குள் மூழ்கினர். நீரில் இருந்து வெளியே வர அவர்கள் போராடிக் கொண்டிருந்த போது நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டனர். இதனால் அவர்களால் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டதில் மூச்சடைத்து அங்கேயே பலியாகினர். அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்கள் ஆங்காங்கே கிடந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உடனே போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், பல மணி நேரமாக போராடியும் பாறைக்கு இடையே சிக்கிய சடலங்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
திருமணத்தை முன்னிட்டு நடக்க இருந்த போட்டோஷூட்டே கடைசி புகைப்படமாகிப் போனது சோகத்தின் உச்சம்... 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1774 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

12 views

பிற செய்திகள்

சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

14 views

திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

109 views

மனிதநேய உதவியால் மறுபிறவி எடுத்த 3 வயது குழந்தை

ஐதராபாத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையொன்று, உலகம் முழுவதும் உள்ள நல் உள்ளங்களின் மனிதநேய உதவியால், மறுபிறவி எடுத்துள்ளது.

63 views

சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

30 views

ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.