"நான் அவன் இல்லை....போலீசை குழப்ப முயற்சி" - கெபிராஜிடன் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை
பதிவு : ஜூன் 01, 2021, 10:14 AM
பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றிய, கராத்தே ஆசிரியர் மீது, மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரைத்தொடர்ந்து, விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்த மாணவி அளித்த புகாரில், 2013 ஆம் ஆண்டு  சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லினியம் பள்ளிக்கு, கராத்தே போட்டிக்கு வந்ததாக கூறியுள்ளார். அப்போது, ஆசிரியர் கெபிராஜ் தொடர்பு கிடைத்ததாகவும்,அண்ணா நகர் பள்ளியில் பயிற்சி அளிப்பதாக கூறியதால், அங்கு சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, போட்டி தொடர்பாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது, அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கெபிராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கேரளப் பெண் தெரிவித்த  சம்பவங்கள் அனைத்தும் உண்மை தான்,
ஆனால் பாலியல் தொந்தரவு செய்யவில்லை என கெபிராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். பாலியல் தொந்தரவு செய்தது யார் என்ற கேள்விக்கும் கெபிராஜ் முறையாக பதிலளிக்கவில்லை. திரைப்படத்தில் வருவது போல் நான் அவன் இல்லை என கூறி போலீசாரை கெபிராஜ் குழப்ப முயற்சி செய்துள்ளார். கிடுக்கிப்பிடி விசாரணையில் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. கெபிராஜுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு எழும்பூர் கூடுதல் மகிளா நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு ஜூன் 14ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மகாராஜன் உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

"சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு" புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்...

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

25 views

பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

374 views

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

21 views

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

36 views

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

20 views

தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? தேர்வு நடத்துவதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து ,முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.