கொரோனாவால் இறந்த இருவரின் உடல்கள் மாறியதால் அதிர்ச்சி - இறுதி சடங்கின் போது திடீரென கண்டுபிடிப்பு
பதிவு : ஜூன் 01, 2021, 09:13 AM
கேரளாவில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாற்றி வழங்கப்பட்டது இறுதி சடங்கு செய்யும் முன் கண்டுபிடிக்கப்பட்டது.
 கேரளாவின் இடுக்கி மாவட்டம் குமுளியை  சேர்ந்த சோமன் என்பவர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு தொடுபுழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மூணாறு பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

சோமனின் உடலை குமுளியில் உள்ள சொந்த இடத்தில் எரியூட்ட உறவினர்கள் தயாரான போது அது சோமன் உடல் இல்லை என்று  தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விசாரணையில் 2 உடல்களின் மேல் ஒட்டுவதற்காக கொடுக்கப்பட்ட விவர சீட்டு  மாற்றி ஒட்டப்பட்டது தெரிய வந்தது. 
இதனால் சோமனுக்கு பதில் பச்சையப்பனின் உடல் வழங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் எடுத்த நடவடிக்கையால்  பச்சையப்பனின் உறவினர்கள் குமுளி சென்று அவரது உடலை பெற்று சென்றனர். சோமனின் உடல் மூணாறு கொண்டு செல்லப்பட்டு இறுதி  சடங்கு நடத்தப்பட்டது. கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் உடல்கள் மாறியதால் உறவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.

8 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

484 views

அயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்?

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...

61 views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

59 views

உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.

14 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.