ஜூன் மாத ரேஷன் பொருட்கள் : "வீடுகளுக்கு வந்து டோக்கன் வழங்கப்படும்"- தமிழக அரசு அறிவிப்பு
பதிவு : ஜூன் 01, 2021, 07:20 AM
ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் கூட்டம் சேராமல் தடுக்க, ஜூன் மாத ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த டோக்கன்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு, வீடுகளுக்கு சென்று வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்குவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன்களின் படி வரும் 5ஆம் தேதி முதல் பொருட்களை சென்று பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் முதலே நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"முதல் கட்ட நிவாரணம் - ஜூனிலும் பெறலாம்"

முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை 
பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் ஜூன் 
மாதத்திலும் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில்,  98.4 சதவீதம் பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் ஜூனிலும் முதல் கட்ட நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

9 views

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

13 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

10 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

9 views

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.