18 வயதிற்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பதிவு : மே 31, 2021, 06:50 PM
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
18 வயதிற்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் 

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் அதன் மீது பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தி வருகிறது.தடுப்பூசி குறித்து கவனம் செலுத்தி வரும் உச்சநீதிமன்றம் இதற்காக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என தெரிவித்தார்.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளே போதுமானதாக இருக்கும் என்றும் இருப்பினும் தடுப்பூசி இறக்குமதி செய்யும் திட்டம் இருப்பதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.சீரம் நிறுவனம் பாரத் பயோடெக் நிறுவனம் ரெட்டி லேப் நிறுவனம் ஆகியவையே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை எனவும் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.அப்போது, கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் நாட்டின் பல பகுதிகளில் சிக்கல் இருக்கும் நிலையில் இவற்றை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6955 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

142 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

108 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

85 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

84 views

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

33 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

502 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.