இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பதிவு : மே 31, 2021, 04:25 PM
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் அதன் மீது பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தி வருகிறது

தடுப்பூசி விவகாரம் குறித்து கவனம் செலுத்தி வரும் உச்சநீதிமன்றம் இதற்காக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தப்பட்டு விடும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளே இதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் இருப்பினும் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சீரம் நிறுவனம் பாரத் பயோடெக் நிறுவனம் ரெட்டி லேப் நிறுவனம் ஆகியவையே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை என என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்  கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் நாட்டின் பல பகுதிகளில் சிக்கல் இருக்கும் நிலையில் அதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இவற்றை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுங்கள் எனவும் மத்திய அரசை கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.

4 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

462 views

அயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்?

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...

60 views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

57 views

உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.

13 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.