"முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி"
பதிவு : மே 30, 2021, 09:57 PM
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
"முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி" 

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவி அறிவித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி  தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த  28-ம் தேதி,  அறிக்கை வாயிலாக முதலமைச்சரை கேட்டுக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29-ம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

633 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

9 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.

7 views

"மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.