புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு ஆளானால் இதய, புற்று நோய் ஏற்பட 50 % வாய்ப்பு
பதிவு : மே 30, 2021, 08:04 PM
புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்றை தொடர்ந்து புற்றுநோய், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு ஆளானால் இதய, புற்று நோய் ஏற்பட 50 % வாய்ப்பு 

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்றை தொடர்ந்து புற்றுநோய், இதய நோய் ஏற்பட  அதிக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.புகையிலை தடுப்பு திட்டத்தை  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள், புற்று நோய், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்களுக்கு ஆளாகலாம் எனவும் புகை பிடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் தாக்க 50 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளதாகவும், மரணம் கூட ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.புகை பிடிப்பதில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று, நேரடியாக நுரையீரல் உடன் தொடர்புடையது என்பதால் புகைப்பழக்கம் கொண்டவர்களிடம் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த 2019-ல் சிகரெட் வகைகளுக்கு இந்தியா தடை விதித்த செயலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - துரத்தி துரத்தி சுட்டதால் பரபரப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

26 views

மறைந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு - ஜார்ஜ் பிளாய்டின் சிலை திறப்பு

அமெரிக்காவில், போலீசார் கழுத்தில் மிதித்த சம்பவத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு, நியூயார்க் மாகாணத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

11 views

கொரோனா பாதிப்பு எதிரொலி - அதிகரிக்கும் வீடுகளை இழந்தவர் எண்ணிக்கை : மன்ஹட்டான் பகுதியில் வெகுவாக அதிகரிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கொரோனா பாதிப்புகளினால் வீடுகளை இழந்து சாலைகளில் வசிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

13 views

புதிய பிரமாண்ட எண்ணெய் வயல் - சின்ஜியாங் மாகாணத்தில் கண்டுபிடிப்பு

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 100 கோடி டன்கள் அளவு கொண்ட கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஈரானில் உதயமாகும் புதிய ஆட்சி - அதிபராகிறார், இப்ராஹிம் ரைசி

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைஸி என்ற பழமைவாதத் தலைவர் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

9 views

இன்று உலக அகதிகள் தினம் - பாரமாக போய்விடும் அகதிகளின் கனவுகள்

பெருங்கனவுகளுடன் தாய் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் அகதிகள் பலர் இருக்க... அத்தனை துயரத்திலும் சாதனை என்பது முயன்றால் சாத்தியமே என்பதற்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறார், இளம் நீச்சல் வீராங்கணை ஒருவர்... அகதிகள் தினமான இன்று... அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.