நிவாரணப் பணி புரிந்தோருக்கு வீரவணக்கம்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
பதிவு : மே 30, 2021, 06:25 PM
மாற்றம் : மே 30, 2021, 06:29 PM
புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.77-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது, புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கூறிய மோடி,... புயல்களால், இழப்பை சந்தித்த நபர்களுடன் தேசம் துணை நிற்பதாக தெரிவித்தார்.கொரோனா 2-வது அலையால் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததாகவும்,நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில், டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்ததாகவும் மோடி கூறினார்.மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் டேங்கர் லாரி ஓட்டுநர்கள், நோயாளிகளின் கண்களுக்கு கடவுளின் தேவதை போல தெரிவதாகவும்,ஆக்சிஜனை துரிதமாக  கொண்டு சேர்ப்பதில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிக முக்கிய பங்காற்றியதாகவும் கூறினார்.ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை பெண்கள் இயக்கியதை நினைத்து ஒவ்வொரு பெண்களும் பெருமைப்படுவதாகவும் அவர் பேசினார்.குறுகிய காலத்தில் இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

85 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

82 views

பிற செய்திகள்

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

9 views

"கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை" - முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

11 views

வரும் 25ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்

12 views

"மளிகை தொகுப்பு பைகள் வழங்கப்படவில்லை" முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டுகோள்

14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

35 views

நீட் விலக்கு உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

நீட் தேர்வில் இருந்து உறுதியாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

37 views

"நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவிடம் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.