வருவாய்க்காக ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்.. பலரின் உயிரைக் காப்பாற்றிய வார்டு பாய்
பதிவு : மே 30, 2021, 11:08 AM
தங்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வருவாய்க்காக ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்..  பலரின் உயிரைக் காப்பாற்றிய வார்டு பாய்  

தங்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையில் இன்று காலை திடீரென தடை ஏற்பட்டது. இதனை கவனித்த அங்கிருந்த வார்டு பாய் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கு ஓடியுள்ளார்.  அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக ஆக்சிஜன் சப்ளை தொடர செய்த வார்டு பாய் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.மருத்துவமனை கண்காணிப்பாளர்  புகாரின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 3  பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்களுக்கு வருவாய் இல்லாததால்,ஆக்சிஜன் சப்ளையை துண்டித்தால் நோயாளிகள் அபாய கட்டத்தை அடைந்து வேறு மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்வார்கள் அல்லது இறந்து போவார்கள் அப்போது வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில் செய்ததாக தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்திற்காக மனிதன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை உணர்ந்து, அரசுகள் வாழவாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

87 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

செப்.10 முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

1 views

தேசத்துரோக வழக்கில் விசாரணை நிறைவு - இன்று 3-வது முறையாக ஆயிஷா சுல்தானா ஆஜர்

தேசத்துரோக வழக்கில் இன்று மூன்றாவது முறையாக ஆஜரான ஆயிஷா சுல்தானா, விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.

0 views

ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

26 views

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

41 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.