விழித்து கொள்ள மறுக்கும் மக்கள் - அறியாமையா ? அலட்சியமா ?
பதிவு : மே 30, 2021, 10:57 AM
நிரம்பி வழியும் படுக்கைகள், அன்றாடம் பறிபோகும் உயிர்கள் என கொரோனாவின் கோர தாண்டவத்தை பார்த்தும் கூட, கடலூர்வாசிகள் இன்றும்.... விழிப்புணர்வின்றி வலம் வந்து கொண்டிருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது....
நிரம்பி வழியும் படுக்கைகள், அன்றாடம் பறிபோகும் உயிர்கள் என கொரோனாவின் கோர தாண்டவத்தை பார்த்தும் கூட, கடலூர்வாசிகள் இன்றும்.... விழிப்புணர்வின்றி வலம் வந்து கொண்டிருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.... 


கொரோனாவுக்கு கொத்து கொத்தாக மக்கள் பலியாகி வருவது தெரிந்தும் கூட... கொரோனா தங்களை ஒன்று செய்யாது... என கூறி வரும் மக்களின் அறியாமை என்னவென்று சொல்வது. தற்போது கிராமங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில், கடலூரை பொறுத்தவரை 80 சதவீத பாதிப்பு கிராம மக்களிடையே பதிவாகி வருகிறது. வியர்வை சிந்தி உழைக்கும் தங்களை எப்படி கொரோனா தாக்கும் என திருப்பி கேள்வி கேட்கின்றனர்., உழைப்பாளிகளான இவர்கள்.

கடலூர் மாவட்டங்களில் பல கிராமங்களில் அன்றாடம் பல காரணங்களால் மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது... ஆனால் அவற்றை எல்லாம் சாதாரண உயிரிழப்புகளாகவே கருதி மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், பல கிராமங்களில் மக்களிடையே முக கவசம் அணியும் பழக்கம் என்பது விசித்திரமாகவே பார்க்கப்படுகிறது.... சமூக இடைவெளியை மறந்து சுறுசுறுப்பாக உழைத்து வரும் இவர்களுக்கு தெரியவில்லை... கொரோனா நம்மை சோர்வாக்கி விடும் என்று.... 

தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டும் கூட,  தடுப்பூசி போட்டால் உயிரிழந்துவிடுவார்கள் என ஒரு வித கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் கிராம வாசிகள் அலட்சியமாக காட்டி வருவது... அரசின் முயற்சிகளை வீணாக்குகிறது... கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர்... மக்களின் ஒத்துழைப்பை வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார். 

பாலசுப்பிரமணியன், ஆட்சியர், கடலூர்
"காய்ச்சல் முகாம்களை அதிகரித்துள்ளோம்"
"அறிகுறி தென்பட்டால் மக்கள் உடனே மருத்துவரை அனுகலாம்"
"அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள்"
"தடுப்பூசியை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" தடுப்பூசியின் பயன்களை மக்களுக்கு எடுத்துரைக்க அதிக கவனம் செலுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளது, அரசு. கடலூர் மாவட்டத்தில், கட்டுக்கடங்காமல் வலம் வரும் கிராம வாசிகளை கட்டுப்படுத்தினால் தான் கொரோனா கட்டுக்குள் வரும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 




தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

100 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

13 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.