ஊரடங்கில் உணவின்றி தவிப்பு - பசியாற்றும் போலீசார், தன்னார்வலர்கள்
பதிவு : மே 30, 2021, 10:04 AM
தமிழகம் முழுவதும் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பலரின் பாசியாற்றி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பலரின் பாசியாற்றி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் கோவில் நிர்வாகம் உணவின்றி தவித்த 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியது. அங்குள்ள ஶ்ரீ அம்மன் பொதுநல அறக்கட்டளை இந்த நிகழ்வை முன்னின்று செய்தது. ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார் மற்றும் போலீசார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.அறக்கட்டளை சார்பில் ஊரடங்கு முடியும் வரை இந்த அன்னதானம் தொடரும் என அதன் தலைவர் அருள்தாஸ் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆதரவற்றோர், முதியோருக்கு துணை நடிகர் மற்றும் தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். ஆரணியை சேர்ந்த தன்னார்வலர் மதன் மற்றும் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த துணை நடிகர் வாசு தேவன் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ நினைத்துள்ளனர். அதன்படி கடந்த 10 நாட்களாக தினமும் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர். 

திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவலர்கள் 200 ஏழை , எளிய மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினர். திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்பி  பிரியா ஆகியோர் அறிவுறுத்தலின் படி பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார், பழனி சாலை, முருக பவனம், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சரக காவல்துறை டி ஐ ஜி சாமுண்டீஸ்வரி ஏற்பாட்டின் படி இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த செவிலிமேடு, குறுவிமலை , பிள்ளையார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை காவல்துறையினர் நேரடியாக சென்று வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

18 views

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

92 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

20 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

448 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

8 views

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.