எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் மம்தா - சிரமங்களை கடந்து முன்னேறிய மம்தா பானர்ஜி
பதிவு : மே 03, 2021, 04:24 PM
அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் - "தீதி" எனும் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.....
மேற்கு வங்கத்தின் பெண் புலி என வர்ணிக்கப்படும் மம்தா பானர்ஜி, அரசியல் மற்றும் பொது வாழ்வில், பலருக்கு சிம்ம சொப்பனமாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். 1955 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள  அஸ்ரா என்னும் இடத்தில், ப்ரோமிலேஸ்வர் பானர்ஜி, காயத்ரி பானர்ஜி ஆகியோருக்கு மகளாக பிறந்தார் மம்தா பானர்ஜி. 1970ஆம் ஆண்டு, 15-வது வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டு, பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார், மம்தா...சிறு வயதில் இருந்தே வறுமையில் வாடிய நிலையிலும்,  இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு படித்தார், மம்தா...பின்னர் ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். படிப்பு மட்டுமல்லாது பேச்சு திறன், கவிதை, ஓவியம் வரைவதிலும் மம்தா சிறந்து விளங்கினார்.அரசியல் ஆர்வத்தால் உள்ளூர் காங்கிரஸில் படிப்படியாக முன்னேறிய மம்தா பானர்ஜி,  1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். பின்னர் 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மம்தா,. இந்திய அரசியலில் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் என்ற பெருமையை  பெற்றார். எளிமையிலும் எளிமை, போராட்ட குணம், எப்போதும் மக்களுடன் இருப்பது போன்றவை இவரின் இயல்பு... 
கடந்த 1997ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பூசலின் காரணமாக அக்கட்சியிலிருந்து அவர், வெளியேற்றப்பட்டார் . 1998-ம் ஆண்டு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, ஆளும் இடதுசாரி முன்னணிக்கு,  நேரடி எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு மாற்றாக இவரின் திரிணாமுல் காங்கிரஸ் விளங்கியது. அதன் பிறகு பல கூட்டணிகளில்,
இணைந்து இரண்டு முறை மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும், ஒரு முறை மின்சாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.  பின்னர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில்,  அதைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்த மம்தா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மேற்கு வங்கத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அது முடியவில்லை.  
தம் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய போதிலும், சக்கர நாற்காலில் அமர்ந்தவாறு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி. அதனால், தான் போராடும் குணம் கொண்ட மம்தா பானர்ஜியை மேற்கு வங்க மக்கள்,  பெண் புலி என பாசத்துடன் அழைக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6227 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

911 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

305 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

92 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

63 views

பிற செய்திகள்

இந்தியாவிற்கு மருந்துகள் இலவசம் - ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

200 views

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி ஆலோசனை - சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

23 views

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

21 views

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்

கேரளாவில் ஆட்சியை தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள், சந்தித்த சவால்களை பார்க்கலாம்...

45 views

கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி - 40 ஆண்டு டிரெண்டை முறியடித்த பினராயி

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

50 views

கேரள சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் பினராயி

கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி. தொடர்ந்து 2 வதுமுறையாக ஆட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.