தோல்வியிலும் துவளாத "நாம் தமிழர்"- பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடம்...
பதிவு : மே 03, 2021, 12:33 PM
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் சீமானும் சாதித்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
யாருடனும் கூட்டணி இல்லை... இளைஞர்களே எங்களின் பலம்... 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி... இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் தில்லாக களமிறங்கும் சீமான், இந்த தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
மான்டேஜ்ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தபோதே அவர்களை எதிர்த்து தனது நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். அவர் முதன்முதலாக தேர்தல் களம் கண்டது 2016 சட்டமன்ற தேர்தலில்தான். அந்த முதல் தேர்தலிலேயே கெளரவமான வாக்கு சதவீதத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.07% வாக்கு சதவீதத்தை காட்டியது.2016 தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்கு வித்தியாசம் ஆயிரம் ஓட்டுகளுக்கும் கீழே இருந்தது. ஆக, இந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பறித்தது சீமான் தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள். 2016 தேர்தலுக்கு பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி.2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுகவுக்கு அடுத்ததாக நான்காவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி, 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. 2019-இல் நடந்த 22  சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது. அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியதால் இந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெரும் நம்பிக்கையோடு களமிறங்கினார்கள். 
வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட சீமான், 234 தொகுதிகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தத் தேர்தலிலாவது வெற்றிக் கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு இப்போதும் நிறைவேறவில்லை. ஆனால், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 6 சதவீதத்தை தொட்டிருக்கிறது.அதிமுக - திமுக வுக்கு மாற்று நாங்கள்தான் என்று மேடை தோறும் முழங்கும் சீமான், அந்தப் பயணத்தில் ஏறுமுகமாக இருப்பதையே இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது. ஏறுமுகம் வெற்றிமுகமாக மாறுமா என்பதே சீமான் ஆதரவாளர்களின் கேள்வி.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6257 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

929 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

308 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

101 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

அம்மா உணவகம் சூறையாடிய சம்பவம்; திமுகவின் வன்முறை தொடங்கிவிட்டது - அதிமுக தலைமை கண்டனம்

சென்னை ஜேஜே நகர் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

47 views

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மற்றும் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வானதை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

25 views

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்

சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலின், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

21 views

கொரோனா - "மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

22 views

சென்னை அம்மா உணவகத்தில் தாக்குதல்; 2 திமுக தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

384 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.