கேரள சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் பினராயி
பதிவு : மே 03, 2021, 04:28 AM
கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி. தொடர்ந்து 2 வதுமுறையாக ஆட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளை சலசலக்க வைத்தது. கேரள தங்க கடத்தல் வழக்கு, அதன் தொடர்ச்சியாக வந்த டாலர் கடத்தல், கருப்பு பண மோசடி, அன்னிய செலாவணி மோசடி, அரசு திட்டங்களில் முறைகேடு, ஊழல் என அடுக்கடுக்காக வழக்குகளை சந்தித்தது கேரள அரசு. எதிர்க்கட்சிகள் தங்க கடத்தல் வழக்கை உடும்பு பிடியாக பிடித்து தங்க அரசியல் சதுரங்க வேட்டையை தொடக்கின. கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் கைது, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பதவி விலகல், அவரது மகன் மயக்க மருந்து வழக்கில் கைது, அமைச்சர்களிடம் விசாரணை என எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான போராட்டங்களை கையில் எடுத்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின்  குற்றச்சாட்டுகளை முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் அமோக இடங்களில் இடது ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றன. கேரள அரசியல் வரலாற்றில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது இதுவே முதன்முறை. தங்க கடத்தல் துவங்கி ஊழல் வரையிலான குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடவில்லை என்பதால் சபரிமலை விவகாரத்தை எதிர்கட்சிகள், முன்னிறுத்தின. ஆனால், சபரிமலை விவகாரம் இருந்த போதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்தது என்பது இடது சாரிகளின் கருத்து...

கடந்த 1948 ஆம் ஆண்டு கேரளா சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. பட்டம் தாணுபிள்ளை முதல்வரானார். கடந்த 1969 தேர்தலில் முதன்முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சியை பிடித்தனர். ஈ.எம்,.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதற்கடுத்து தற்போது இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி வரை ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை கொடுத்து வந்தார்கள் கேரள வாக்காளர்கள். ஆனால், இப்போது... அந்த சரித்திரம் மாறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் பணியை தொடங்கினார் ஸ்டாலின் - 5 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார், பின்னர் 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

892 views

திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதை

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

92 views

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார்.

31 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

7 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

99 views

கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

395 views

நாரதா லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்; மேற்குவங்க அமைச்சர்கள் உட்பட 4 பேர் கைது - மம்தா பானர்ஜி ஆவேசம்

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

46 views

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

102 views

கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.