மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். வெற்றி - தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
பதிவு : மே 03, 2021, 04:00 AM
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
8 கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மைக்கு 148 இடங்களே தேவை என்ற நிலையில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மிகப்பெரும் வெற்றியாக இது கருதப்பட்டாலும் இதற்காக பெரிய விலைகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜிக்கு, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடும் போட்டி அளித்தார். இவர் மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து பாஜகவுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கடந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக இம்முறை கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 80 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.   திரிணாமுல் காங்கிரசின் வெற்றியை  அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

61 views

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார்.

5 views

பிற செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக அசுரவேக வளர்ச்சி - வலுவான இருப்பை உறுதி செய்த பாஜக

மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு முடிவுரை எழுதிவிட பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தாலும்... மாநிலத்தில் தன்னுடைய வலுவான இருப்பை உறுதி செய்திருக்கிறது பாஜக.

0 views

மே.வங்க தேர்தலில் திடீர் திருப்பம்: முதல்வர் வேட்பாளர் மம்தா தோல்வி?

மே.வங்க தேர்தலில் திடீர் திருப்பம்: முதல்வர் வேட்பாளர் மம்தா தோல்வி?

561 views

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்தன

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்து உள்ளன.

139 views

குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - பொற்கோயிலில் சீக்கியர்கள் புனித நீராடல்

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

34 views

குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு

டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

61 views

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற வந்த 18 பேர் பலி - பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலம் பரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உயிரிழந்தது, தீராத வலியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.