01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு
பதிவு : மே 01, 2021, 01:55 PM
ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு 

ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மே 19 முதல் உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு அளித்துள்ள கடை உரிமையாளர்கள், தொற்று பரவாதவாறு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தனர். 

 பெருவில் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினர். பெருவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி லீமா பகுதியில் உள்ள வீதிகளில் மருத்துவ மாணவர்கள் போராடினர். மேலும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் தங்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பெரு நாட்டில் இதுவரை 17 லட்சத்து 91 ஆயிரத்து 998 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 60 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், டிஸ்னிலேண்ட் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் தொற்றுப் பரவல் குறைந்து இருப்பதால், பூங்கா திறக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே, பூங்காவில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது 

பிரிட்டனில், ஆயிரக்கணக்கான, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பெரிய அரங்கில், நடனமாட வைத்து, அந்நாட்டு அரசு கொரோனா பரவுகிறதா என சோதனை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பிரிட்டனில் உள்ள நடன விடுதிகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு,பரிசோதனை நடத்தி, கொரோனா தொற்று இல்லாதவர்களை நடனமாட வைத்து அந்நாட்டு அரசு பரிசோதனை செய்துள்ளது. மிக  பெரிய அரங்கில் இளைஞர்கள் முக கவசம் இல்லாமல் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர். இதன் மூலம் கொரோனா பரவல் இல்லாமல் இருந்தால், நடன விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

பிரபல பாப் பாடகி பிலி எலிஷ், தமது புதிய ஆல்பத்தை, வெளியிட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என துவங்கும் இந்த பாடல் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சீனாவின் நான்டாங் நகரில் வீசிய சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 11  பேர் உயிரிழந்தனர். திடீர் என்று வீசிய சூறைக்காற்றில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, மரங்கள் விழுந்ததால், 11 பேர் வரை உயிரிழந்தனர். மரங்களை அகற்றும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 

நெதர்லாந்தில் முதன்முறையாக 3 டி எனப்படும் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் கட்டப்பட்ட வீட்டிற்கு, டச்சுத் தம்பதியினர் குடியேறினர். எலிஸ் லட்ஸ் மற்றும் ஹாரி டெக்கெர்ஸ் தம்பதியினர், தாங்கள் வசிக்கப்போகும் 2 படுக்கையறைகள் கொண்ட 3 டி இல்லத்தைப் பார்வையிட்டனர். மொத்தம் 24 தனித் தனி பகுதிகளாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த வீடானது இய்ந்தோவன் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டு முழுமையான வீடாக மாறியுள்ளது. இது குறித்து டச்சுத் தம்பதி தெரிவிக்கையில், வழக்கமான வீடுகளைப் போல் அல்லாமல் இது மிகவும் புதுமையாக இருப்பதாகவும், மேலும், வீட்டிற்குப் பூசப்பட்ட வண்ணம் காண்போரை மயக்கும் வகையில் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1041 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

180 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

51 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் பெட்ரோல் தட்டுப்பாடு; வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள்

149 views

தன்னலமற்ற சேவையின் மறுஉருவம்; பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம். உலக செவிலியர் தினம். தாயைவிட மேலானவர்கள் என பாராட்டு .

17 views

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

16 views

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

283 views

பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் லியான்சென் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி மூலம் உரையாடினர்.

54 views

இன்று உலக செவிலியர்கள் தினம் : வெண் புறாக்களை' கொண்டாடும் தினம் இது

கொரோனா தடுப்பு பணிகளில் இரவு பகலாய் போராடும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு உயிருட்டுகிறது இந்த செய்தி தொகுப்பு.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.