32 ஆண்டுகளாக தீவு வாழ்க்கை - கற்பனைக்கு அப்பாற்பட்ட கனவு வாழ்க்கை
பதிவு : ஏப்ரல் 30, 2021, 04:33 PM
32 வருடங்களாக தனி ஆளாக ஒரு தீவை குழந்தையைப் போல் பாதுகாத்த நபர், அத்தீவுக்கு ப்ரியாவிடை கொடுக்கும் கவலை தோய்ந்த நிகழ்வு பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
உலகப் புகழ்பெற்ற ராபின்சன் க்ரூசோ ​புதினத்தில் வருவது போல, உண்மையாகவே இத்தாலியில் ஒரு ராபின்சன் க்ரூசோ வாழ்ந்து வருகிறார்...
அவர்தான் 32 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாய் தீவில் வாழ்ந்து வந்த மௌரோ மொராண்டி...1989ம் ஆண்டு தன் நண்பர்களுடன் இணைந்து, கடற்பயணம் மேற்கொண்ட மௌரோ மொராண்டி இத்தாலியின் மாடலினா தீவுக்கூட்டத்தில் பயணித்தார்...அங்கிருந்து தங்கள் வருங்காலப் பயணங்களுக்குப் பணம் சம்பாதித்து கிளம்புவதுதான் அவர்கள் நோக்கம்...
மௌரோ மொராண்டிக்கும் அதே எண்ணம்தான் இருந்தது... புடெலி (Budelli) தீவைக் காணும் வரை...புடெலி தீவின் பாதுகாவலர் இன்னும் 2 நாட்களில் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன், அவர் அத்தீவை குழந்தையைப் போல் வாரி அணைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தீவுக்குக் தேவையான பணிவிடைகளை செய்து வந்தார்...புடெலி தீவை அடைந்ததில் இருந்து மனிதர்களைப் பார்க்க விருப்பமே இல்லாத அளவிற்கு, இத்தீவு அவரைக் கட்டிப்போட்டு விட்டது... யாருக்குத் தான் பிடிக்காது இளஞ்சிவப்பு நிற மணலும், பச்சைப்பசேலென மரங்களும் நிறைந்த தீவை...!
யாரும் இல்லாத் தனிமைத் தீவில்... மனிதர்கள் வாசமின்றி... பரபரப்பான நாட்களின்றி... வாகனங்களின் இரைச்சல் இன்றி... தானும் கடலும் மட்டுமாக இயற்கையோடு இயைந்து நிசப்தமான வாழ்க்கையை இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்...மின்சாரம் இல்லா தீவில், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தியும், சுற்றி சுற்றி எங்கு திரும்பினாலும் கடல் நீர் மட்டுமே இருப்பதால், மழை நீரைச் சேகரித்துக் குடிநீராக்கியும் காலங்கழித்து வந்துள்ளார்...ஆரம்ப நாட்களில் மனிதர்களை உள்ளே அனுமதிக்காது இருந்த மௌரோ மொராண்டி, காலஞ் செல்லச் செல்ல, தான் மட்டும் இந்த அழகை ரசித்தால் போதாது, அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என கதவுகளைத் திறந்துள்ளார்...வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தீவின் அம்சங்கள் குறித்து விளக்கி, புதுப்புது மனிதர்களின் உறவையும் சம்பாதித்து வைத்துள்ளார்... குளிர் காலங்களில் புடெலி தீவுக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால், தனிமையில் இருக்கும் தனக்கு புத்தகங்களே துணை என்று வாசிப்பில் மூழ்கி விடுவார்...தீவின் மரம் செடி கொடியும் மௌரோ மொராண்டியின் பெயரைக் கூறும் அளவிற்கு தீவைப் பற்றிய அத்துனை விஷயங்களும் அவருக்கு அத்துப்படி...தீவின் அழகை புகைப்படமெடுத்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிடுவதால், இணையத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்...ஆனால் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது புதிய சிக்கல் ஒன்று மௌரோ மொராண்டியின் வாழ்வில் புயல் போல் தாக்கியது...ஆம்... புடெலியில் உள்ள லா மாடலினா தேசிய பூங்கா அதிகாரிகள் 2016ம் ஆண்டு முதலே மௌரோ மொராண்டியை தீவை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்தனர்...தொடர் அழுத்தம் காரணமாக தீவை விட்டுச் செல்லும் மௌரோ மொராண்டியைப் பிரிய, புடெலி தீவும் தாய்ப்பசுவை விட்டுப் பிரியும் கன்றைப் போல கலங்கித் தான் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை...


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6598 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

பிற செய்திகள்

8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...

உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

39 views

முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.

24 views

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

10 views

சிங்கப்பூரில் பரவும் உருமாறிய வைரஸ்; சிறுவர், சிறுமியர்களை அதிகம் தாக்கும்

இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

1541 views

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; ஆவணப்படத்தை வெளியிட்ட சீனா - 2500 நிமிட ஆவணப்படம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முழு நீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது.

33 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.