கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கூடாது - எதிர்ப்பு தெரிவித்து சு.ப.உதயகுமார் அறிக்கை
பதிவு : ஏப்ரல் 30, 2021, 02:58 PM
கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கூடாது - எதிர்ப்பு தெரிவித்து சு.ப.உதயகுமார் அறிக்கை

கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.நேற்றைய தினம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.இந்நிலையில், இது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூடங்குளம் அணு உலைகள் நிலநடுக்கங்களை கணக்கில் எடுத்து கட்டப்பட்டவை அல்ல என்றும் இதனை இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புகுஷிமா போன்றதொரு விபத்தை தாங்கி கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை என்பது தான் உண்மை என குறிப்பிட்ட அவர், கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை கட்டக்கூடாது என்றும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார். 

பிற செய்திகள்

எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்

தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

41 views

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்துஎதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பிரச்சினை.

42 views

ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

29 views

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

32 views

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

90 views

முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றார் ; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.