கே.வி.ஆனந்த் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - "மிக சீக்கிரமாக போய்விட்டார்"
பதிவு : ஏப்ரல் 30, 2021, 02:27 PM
கே.வி.ஆனந்த் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - "மிக சீக்கிரமாக போய்விட்டார்" இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - "மிக சீக்கிரமாக போய்விட்டார்" 


இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், கனிவான, நேர்மையான மனிதர் காலமாகி விட்டதாக கூறியுள்ளார். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிக இனிமையான மனிதர் கே.வி.ஆனந்த் என்று குறிப்பிட்டுள்ள தனுஷ், மிக மிக சீக்கிரமாக மறைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். கே.வி.ஆனந்த், தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கே.வி.ஆனந்த் மறைவுக்கு, அனேகன் படத்தில் நடித்திருந்த நடிகை அமிரா தஸ்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். மிக உணர்ச்சிகரமான, ஒழுக்கமான மனிதர் கே.வி.ஆனந்த் என்று கூறியுள்ள அமிரா, உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்காக எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் அமிரா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தங்களின் மறைவு சினிமாவிற்கு பேரிழப்பு என்றும் நடிகை அமிரா தெரிவித்துள்ளார். 

 கே.வி.ஆனந்த் மறைவுக்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், கே.வி.ஆனந்தின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான, அயன், கோ, காப்பான், மாற்றான், அனேகன் ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாரடைப்பால் மரணம் அடைந்த, பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட அவர், கே.வி. ஆனந்தின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் தெரிவித்து உள்ளார். 

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு, பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், கே.வி.ஆனந்தின் மறைவு செய்தி கேட்டு, வருத்தம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என்று குறிப்பிட்டுள்ள அல்லு அர்ஜூன், கே.வி.ஆனந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1041 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

180 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

53 views

பிற செய்திகள்

துணை நடிகர் கில்லி மாறன் கொரோனாவால் உயிரிழப்பு; திரையுலகினர் இரங்கல்

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் கில்லி மாறனுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

289 views

இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்காவே காரணம்; நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் பதில் மனு

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

53 views

அமேசான் பிரைமில் கர்ணன்..! வரும் 14 ஆம் தேதி வெளியீடு

கர்ணன் திரைப்படம் மே 14ஆம் தேதியன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.

31 views

இன்று சர்வதேச அன்னையர் தினம்...அன்னையை போற்றிய தமிழ் சினிமா....!

அன்னையர் தினமான இன்று, தமிழ் சினிமாவில் தாயை போற்றிய, நெகிழ வைக்கும் சில பாடல்களை தற்போது பார்க்கலாம்...

232 views

கேரளாவில் இன்று முதல் 16 வரை முழு ஊரடங்கு - மம்மூட்டி குரலில் விழிப்புணர்வு வீடியோ

கேரளாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 38,460 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

213 views

நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் - கொரோனாவுக்கு பலியான அடுத்த பிரபலம்

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார். அவரை பற்றி பலரும் அறியாத சில தகவல்களை தற்போது காணலாம்....

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.