மே 2 வாக்கு எண்ணிக்கை : "நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" - இந்திய தேர்தல் ஆணையம்
பதிவு : ஏப்ரல் 28, 2021, 08:08 AM
வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து விதமான கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குகள் நேர்மையாகவும் முறையாகவும் எண்ணப்படுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை நாளன்று உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிட நேரிடும் என எச்சரித்திருந்தது.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு கொரோனா, பொது முடக்கம் ஆகியவற்றுக்கு இடையே, விதிகளை முறையாக பின்பற்றி வெற்றிகரமாக பீகார் மாநில தேர்தல் நடத்தியதை சுட்டிக்காட்டியது.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய விதிகள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருப்பதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து வித வழிகாட்டு நெறிமுறை மற்றும் நடவடிக்கைகளை பின்பற்றி தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றதாகவும், அதன் காரணமாக வாக்குப்பதிவு சிறப்பாக இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.வாக்கு எண்ணும் நாளான மே 2ஆம் தேதி, அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முறையான பாதுகாப்பு மற்றும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.மேலும் மே 2 ஆம் தேதி எந்தவித வெற்றி கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதையும், வெற்றி பெற்ற வேட்பாளர் வெற்றிச் சான்றிதழ் வாங்க செல்லும் போது அவருடன் 2 பேருக்கும் மேல் செல்ல அனுமதி இல்லை என உத்தரவிட்டு இருப்பதையும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6398 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1016 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

165 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

ரெம்டெசிவிர் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

42 views

எம்.பி வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி ராஜினாமா - நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களான, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி தங்களது எம்.பி. பதவியை, ராஜினாமா செய்துள்ளனர்.

116 views

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சகாயம்; மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு கட்டணம்

வசதி படைத்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை மேம்பாட்டிற்காக கொடுக்கலாம் என சகாயம் அரசியல் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 views

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

18 views

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றுள்ளார்.

34 views

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.