93-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா - சிறந்த படமாக நோமட்லேண்ட் தேர்வு
பதிவு : ஏப்ரல் 27, 2021, 08:31 AM
திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
அமெரிக்க திரைப்படமான நோமட்லேண்ட்,  சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்ற நிலையில், 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகர் விருதையும், 63 வயதான மெக்டோர்மன்ட் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றுள்ளனர்.

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 93-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை அமெரிக்க திரைப்படமான நோமட்லேண்ட் வென்று உள்ளது. சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இந்த படத்தை இயக்கி உள்ளார். வாகனத்தை வசிப்பிடமாக கொண்டு நாடோடி வாழ்க்கை நடத்தும் பெண்ணின் கதையை இந்த படம் விவரிக்கிறது. முன்னதாக இந்த படம், பிரிட்டிஸ் அகாடமியின் பாப்டா விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. சிறந்த விஷ்வல் எஃபக்ட் படமாக இந்த படம் தேர்வாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், படத்தின் விஷ்வல் எஃபக்ட் கலைஞர் ஸ்காட் ஃபிஷர் விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த இயக்குநருக்கான விருது, சீனாவை சேர்ந்த 39 வயதான பெண் இயக்குநர், க்ளோயி சாவ்-க்கு வழங்கப்பட்டு உள்ளது. நோமட்லேண்ட் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 

சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் வென்று உள்ளது. இந்த படத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த தாமஸ் வின்ட்டர்பர்க் என்பவர் இயக்கி உள்ளார். அனதர் ரவுண்ட் திரைப்படம், வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் விவரிக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. 

சிறந்த திரைக்கதைக்கான விருது, பிராமிசிங் யங் உமன் படத்துக்கு கிடைத்து உள்ளது. இந்த படத்தை, இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் எமரல்டு பென்னல் இயக்கிய நிலையில், அவர் விருதை பெற்றுக் கொண்டார். 

சிறந்த தழுவல் கதைக்கான விருதை தி ஃபாதர் திரைப்படம் பெற்று உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட வயதான தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு விருது கிடைத்து உள்ளது

சிறந்த நடிகருக்கான விருதை 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ் தட்டிச் சென்று உள்ளார். ஆண்டனி ஹாப்கின்ஸ் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் ஆவார். தி ஃபாதர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டனி ஹாப்கின்ஸ் விழாவுக்கு வர முடியாததன் காரணத்தால், அவருக்கு பதில் மற்றொருவர் விருதை பெற்றுக் கொண்டார்

சிறந்த நடிகைக்கான விருதை அமெரிக்காவின் பிரான்சஸ் மெக்டோர்மன்ட் பெற்று உள்ளார். நோமட்லேண்ட் படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருது கிடைத்து உள்ளது. 63 வயதான நடிகை மெக்டோர்மன்ட் வாங்கும், 3-ஆவது ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான விருதை, அமெரிக்க பாடலான Fight for you  தட்டிச் சென்றது. ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெஸ்ஸியா என்ற அமெரிக்க படத்தில் இந்த பாடல் இடம் பெற்று உள்ளது. 

 


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6592 views

கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2659 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1197 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

265 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

75 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

61 views

பிற செய்திகள்

கதை தேர்வில் நயன்தாராவின் புதிய முடிவு? இனி யாருக்கும் ஜோடியாக நடிக்க போவதில்லை

நடிகை, நயன்தாரா இனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

299 views

தனுஷ் ஒரு மந்திரவாதி; கர்ணனை பார்த்த பாலிவுட் இயக்குனர் புகழாரம்

நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

476 views

நடிகர் நிதிஷ் வீரா மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா இன்று காலமானார்.

237 views

3 வயது குழந்தையின் அழகிய பாடல்; ட்விட்டரில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்

மலையாள கதாசிரியர் விவேக் ரஞ்சித்தின் 3 வயது மகள் 99 சாங்ஸ் படத்தின் பாடலை பாடும் அழகிய காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

103 views

இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

261 views

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.