ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்
பதிவு : ஏப்ரல் 24, 2021, 05:19 PM
நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஸிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய மத்திய அமைச்சகங்கள் மற்றும் இதர துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிகரித்துவரும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் அவற்றின் சாதனங்களின் தேவையை எதிர்கொள்ள ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ சாதனங்கள் மீதான இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரி முழுமையாக உடனடியாக தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆக்சிஜன்,ஆக்சிஜனை ஏற்றுமதி செய்யும் ISO Container, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இதர சாதனங்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர், உள்ளிட்ட 16 சாதனங்கள் மீதான இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியில் இருந்து 3 மாதங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

இவை தவிர வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை மூன்று மாதங்களுக்கு உடனடியாக தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இறக்குமதி தொடர்பான விவகாரங்களுக்கு உடனுக்குடன் அனுமதி அளிக்க ஏதுவாக இணைச் செயலாளர் கெளரவ் மசல்தான் என்ற சுங்கத்துறை அதிகாரியையும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6400 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1016 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

165 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

107 views

பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

22 views

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது குறித்து, டெல்லி துணை முதல்வர் விமர்சனம்

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது குறித்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

43 views

அசாம் முதல்வரானார், ஹிமந்த பிஸ்வா சர்மா - சர்பானந்தாவை, பாராட்டிய பிரதமர்

அசாமில் முதல்வராக பதவி ஏற்ற, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் இதர அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?- தேர்தல் தேதி மீண்டும் ஒத்தி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

22 views

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.