ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு
பதிவு : ஏப்ரல் 22, 2021, 06:47 PM
தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளதாக கூறினார்.தனியார் மருத்துவமனைகள் கேட்டால்  ஒரு குப்பியை 783 ரூபாய்க்கு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 டன்னும், புதுச்சேரியில் 150 டன்னும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தற்போது ஆயிரத்து167 டன் இருப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
வெண்டிலேட்டர் இருப்பை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 9,600 வெண்டிலேட்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.கொரோனா பரவலில் பதற்றமான நிலையில் தமிழகம் தற்போது இல்லை என்றும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், தடுப்பூசிகளின் விலையை குறிப்பிட்டு,  நடுத்தர மக்களும் ஏற்கும் வகையில் தடுப்பூசிக்கான  கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.