ஜார்ஜ் பிளாய்டு - மரணம் முதல் நீதி வரை...
பதிவு : ஏப்ரல் 21, 2021, 07:14 PM
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
ஜார்ஜ் பிளாய்டின் மரணம் முதல் தீர்ப்பு வரை அரங்கேறிய சம்பவங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு......
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகரில் வசித்து வந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு...இவர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அங்குள்ள கடை ஒன்றில் பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கள்ள நோட்டு அளித்ததாக கடை ஊழியர் சந்தேகித்தார்.பின்னர், கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீஸ் அதிகாரிகள் காரில் இருந்த ஜார்ஜ் பிளாய்டை எதுவும் விசாரிக்காமல், தரதரவென்று வெளியே இழுத்து, வீதியில் வீசி விலங்கு மாட்டினர்.அப்போது டெரீக் சாயுவின் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி, கைகளில் விலங்கு மாட்டப்பட்டு இருந்த ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் தனது முட்டியைக் கொண்டு அழுத்தி அராஜகத்தை அரங்கேற்றினார்.கைகளும் கட்டப்பட்டு, கழுத்தும் நெரிக்கப்பட்டதால் மூச்சுவிட முடியாமல் திணறிய ஜார்ஜ் பிளாய்ட், தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறியவாறே மூர்ச்சையானார்.இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த சிறுமி ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், போலீசாரின் அராஜகத்தைப் பார்த்து அமெரிக்க மக்கள் கொந்தளித்தனர்.
கருப்பின மக்கள் மீது போலீசார் எப்போதும் வெறுப்பை உமிழ்வதாக மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு அமெரிக்காவெங்கும் போராட்டங்கள் வெடித்தன.இன, மத பாகுபாடின்றி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற வெள்ளை இன மக்கள் பலர், ஜார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டனர். 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' black lives matter' என்ற பெயரில் நடந்த இந்த போராட்டங்களால், வல்லரசு நாடான அமெரிக்காவே ஆட்டம் கண்டது. சர்வதேச அளவிலும் இந்த போராட்டங்கள் கவனம் பெற்றன. தொடர் போராட்டங்களால், சம்பவத்தில் ஈடுபட்ட 4 போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மின்னசொட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனிடையே, ஜார்ஜ் பிளாய்டு மரணம் பற்றி பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், கருப்பினத்தவரைக் காட்டிலும், வெள்ளையின மக்கள் மீதே அதிக வன்முறைகள் நடப்பதாக கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்த நிலையில், அதிபர் தேர்தலில், மறைந்த ஜார்ஜ் பிளாய்டு வசித்த மின்னசொட்டா மாகாணத்தில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்தது.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கை விசாரித்த மின்னசொட்டா நீதிமன்றம், பிளாய்டை கழுத்தில் நெரித்த முன்னாள் போலீஸ் அதிகாரி, டெரீக் சாயுவினை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்டனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.சட்டத்திற்கு மேலாக யாரும் கிடையாது என்று தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க மக்கள் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தாங்கள் தற்போதுதான் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கி உள்ளதாக மறைந்த ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் கூறி உள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது, சர்வதேச அளவில் முன்னுதாரணமாக மாறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6526 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1143 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

232 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

89 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

56 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

50 views

பிற செய்திகள்

ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

62 views

பூனைக்கு ஆயுள் கெட்டி..! 5வது மாடியிலிருந்து குதித்த பூனை உயிர் பிழைத்த அதிசயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பற்றி எரியும் கட்டடம் ஒன்றின் 5 வது மாடியிலிருந்து குதித்து பூனை ஒன்று உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

14 views

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா. இந்தியாவில் உருமாறிய வைரஸ். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை. ஊரடங்கு தளர்வு ஒத்திவைக்க வேண்டியிருக்கும்

901 views

போர்க்களமாகும் இஸ்ரேல் - பாலஸ்தீனம்; மேற்கு கரையில் நடப்பது என்ன?

இஸ்ரேல்- காசா மோதலுக்கு மத்தியில் கலவரபூமியாக மாறிவரும் மேற்கு கரையில் நடப்பது என்ன?

122 views

பெட்ரோலிய நிறுவனம் மீது சைபர் தாக்குதல்; பெரும் தொகை அளித்து தாக்குதல் நிறுத்தம்

அமெரிக்காவில் பெட்ரோல் விநியோகத்தை செயல் இழக்க செய்த, சைபர் தாக்குதல் குழுவினருக்கு பெரும் தொகை அளித்து, பிரச்சனை முடிவு

105 views

நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டிடம்; இஸ்ரேல் வான்படை அடுத்தடுத்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல் காட்சிகள், செய்தி தொலைக்காட்சி நேரலையில் பதிவாகியுள்ளது.

195 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.