சிறப்பு டிஜிபி மீதான வழக்கு - சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை
பதிவு : ஏப்ரல் 21, 2021, 04:15 PM
சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 
சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி. ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏற்கனவே வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும், தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி - நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் தரப்பில்,  
ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, நேரடியாக கண்காணிப்பதாகவும், புலன் விசாரணையில் திருப்தி தெரிவித்துள்ள தனி நீதிபதி, இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாகா குழு விசாரணை, சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை என்றார்.

அரசுத்தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர். மேலும், பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6398 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1016 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

165 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

ரெம்டெசிவிர் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

43 views

எம்.பி வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி ராஜினாமா - நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களான, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி தங்களது எம்.பி. பதவியை, ராஜினாமா செய்துள்ளனர்.

116 views

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சகாயம்; மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு கட்டணம்

வசதி படைத்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை மேம்பாட்டிற்காக கொடுக்கலாம் என சகாயம் அரசியல் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 views

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

18 views

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றுள்ளார்.

34 views

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.