நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி தேர்வில் முறைகேடு - உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஏப்ரல் 20, 2021, 04:39 PM
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து, பதில்மனு தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ரவி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக தலைமை கணக்காளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடுகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்ற குறிப்பாணை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

இதையடுத்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, பதில்மனுவை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6526 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1145 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

232 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

89 views

பிற செய்திகள்

மீனவர்களுடன் படகு மூழ்கியதில் 4 தமிழக மீனவர்கள் மாயம்

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட 8 மீனவர்களுடன் மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

10 views

சூறைக்காற்றுடன் மழை... மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் சேதம்

பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றால் மரங்கள் சரிந்து விழுந்து 12 வீடுகள் சேதமடைந்தன.

28 views

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு | Aavin

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை முதல் விற்பனையாக உள்ளன.

18 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

28 views

தமிழகத்தில் புதிதாக 33,658 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது

15 views

முதல்வரை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.