"பத்திர பதிவு - புதிய நடைமுறை"
பதிவு : ஏப்ரல் 13, 2021, 04:52 PM
சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு போன்ற சுப தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கவும், கூடுதல் கட்டணத்துடன் பத்திரங்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு போன்ற சுப தினங்களில்
பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கவும், கூடுதல் கட்டணத்துடன் பத்திரங்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில்,சித்திரை திருநாள் மற்றும் ஆடிப் பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், அன்றைய நாள் பதிவாகும் பத்திரங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பதிவிற்கும் கூடுதலாக 200 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி சித்திரை திருநாளின் முதல் நாளான நாளை, அரசு விடுமுறையாக இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பதிவாகும் பத்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. தற்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போது நிலத்திற்கு 7 சதவீத முத்திரைத்தாள் வரியும், பதிவு கட்டணமாக 4 சதவீதம் என்று,11 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

தவிர, கட்டுமான ஒப்பந்தத்திற்கு  2 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.இதேபோல, காலி மனை மற்றும் தனி வீடு தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் 4 சதவீதம் என்று 11 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த சூழலில், இனி மேற்குறிப்பிட்ட சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.









தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6289 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

124 views

பிற செய்திகள்

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

20 views

புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

33 views

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

மதுக்கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

193 views

"மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" - மத்திய-மாநில அரசுகளுக்கு சரத்குமார் கோரிக்கை

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

168 views

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

177 views

ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி - ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் விநியோகம் வழங்கியதைத் தொடர்ந்து, இரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.