9 ஐஏஎஸ்-களை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை
பதிவு : ஏப்ரல் 10, 2021, 01:40 PM
உதவி பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
9 ஐஏஎஸ்-களை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை
 
உதவி பேராசிரியர், முதுகலை ஆசிரியர்  தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த விடைகள் சரியானது என பாடப்புத்தகங்களில் இருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் கௌதமன், லட்சுமிகாந்தன், அசோக்குமார், தாமோதரன் மற்றும் சிமியோன் ஆகிய 5 பேர் மேல்முறையீடு செய்தனர்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையம்,  தற்போது அதிரடியான உத்தரவுகளையும், பரிந்துரைகளையும் பிறப்பித்திருக்கிறது.அதன்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில்,  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை  என்றும்,அந்த வாரியத்தில் தலைவர் பதவிகளை வகித்தவர்கள் பொறுப்பின்றி செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைகழித்திருக்கிறது  என்றும்,9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன்படி, 2011-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பல தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் , பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாநில தகவல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.அதன் அடிப்படையில் 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா  வரை ஒன்பது அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள்  சுர்ஜித் சவுத்ரி,  விபு நாயர் , ஜெகன்நாதன்,ஸ்ரீனிவாசன், நந்தகுமார் , ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை அளித்துள்ளது.இந்த ஒன்பது பேரில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் தவிர்த்து மற்ற ஏழு அதிகாரிகளும் பணியில்  இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6405 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1023 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

171 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

46 views

பிற செய்திகள்

எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்

தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

36 views

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்துஎதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பிரச்சினை.

42 views

ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

29 views

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

32 views

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

89 views

முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றார் ; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.