கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மறு உத்தரவு வரும் வரையில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 08, 2021, 03:43 PM
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவு விடுதிகளில் பணியாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தல், முகக்கவசம் அணிதல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது என்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை தொழிற்சாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்கள் இடையேயும், சென்னையிலும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பயணிகள் இருக்கையில் இருந்து பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக செல்லும் பேருந்துகளிலும் இருக்கையில் இருந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடந்து கண்காணிக்க  இ- பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி தொடரும் என்றும் கலைஞர்கள், பணியாளர்கள்  கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வதையும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4639 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

415 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

235 views

பிற செய்திகள்

"அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 views

"சுங்கக்கட்டணம் நியாயமாக இல்லை" - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

18 views

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது.

92 views

அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்று : தமிழக - கர்நாடக எல்லையில் அச்சம்

ஈரோடு மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

46 views

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

474 views

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.