"வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு
பதிவு : ஏப்ரல் 05, 2021, 07:49 PM
வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை எனவும், வாக்காளர் பட்டியில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.
சென்னையில்,செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைப்பெறும் என கூறினார்.கொரோனா பாதிப்பு உள்ளனவர்கள் கடைசி ஒரு மணி நேரம், பி.பி.இ கிட் அணிந்து வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஈ.வி.எம் மற்றும் விவிபேட் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 165 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 91 ஆயிரத்து 180 விவிபேட்களும் பயன்படுத்தப்படும் என்றார்.தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்களிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 537 மிகவும் பதற்றமானவை எனவும், 10 ஆயிரத்து 813 பதற்றமானவை எனவும் சாகு கூறினார். தேர்தல் பணியில், 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை எனவும், வாக்காளர் பட்டியில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

7 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

492 views

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

83 views

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100 views

"ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.