பேரறிவாளன் விடுதலை விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 05:48 PM
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த கடிதத்தின் நகலை பெற்றுத்தரக்கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவில்,  பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எம்.டி.எம்.ஏ விசாரணை முடியும் வரையில் முடிவெடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் ஆளுநர்,  
 உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில்  விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிக்குதான் அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு மாறுப்பட்ட தகவல்களை ஆளுநர் வழங்கியிருக்கும் நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அவர் அனுப்பிய கடித நகலை தனக்கு பெற்று தர வேண்டும் என அற்புதம்மாள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.மேலும் பேரறிவாளன் தன்னுடைய தண்டனையை நிறுத்தி கோரிய வழக்குடன் இணைத்து, அற்புதம்மாள் தொடர்ந்த இவ்வழக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

55 views

பிற செய்திகள்

பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி திறப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

7 views

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : "அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம்" - கொள்முதல் நிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.

14 views

துண்டுபிரசுரம் அளித்து கொரோனா விழிப்புணர்வு - சமூக நல ஆர்வலர்கள் முன்னெடுப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

5 views

"கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி" - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, கொரோனா பாதிப்பு இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக அறிவித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

10 views

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள்..!

நெல்லையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

62 views

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.